வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் இணைந்து சர்வதேச வெண் பிரம்பு தின நிகழ்வை நாளை (15) வியாழக்கிழமை கல்முனையில் நடத்தவுள்ளது.
தரிசனம் பார்வையற்றோர் பாடசாலை மற்றும் உதயம் பார்வையற்றோர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடைபெறும் இந்நிகழ்வு, பார்வைக் குறைபாடுடையவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் சம வாய்ப்புகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என லயன் பொறியியலாளர் எம். சுதர்சன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுமார் 50 பார்வையற்ற மாணவர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், சமூக சேவை பிரதிநிதிகள், லயன்ஸ், லியோ உறுப்பினர்கள் என சுமார் 150 பேரும், விழிப்புணர்வு நடைபயணத்தில் சுமார் 300 பேரும் பங்கேற்கவுள்ளனர்.
நடைபயணம் மற்றும் நினைவு நிகழ்ச்சி
நிகழ்ச்சி காலை விழிப்புணர்வு நடைபயணத்துடன் ஆரம்பமாகும். கல்முனை CTB சந்தியில் இருந்து ஆதார வைத்தியசாலை சந்தி வரை சுமார் 400 மீட்டர் தூரம் இந்த நடைபயணம் இடம்பெறும்.
பங்கேற்பாளர்கள் சிங்கம் ஸ்டூடியோ சந்தியில் வாத்தியக் குழுவுடன் ஒன்றுகூடுவார்கள்.
நடைபயணத்தை தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நினைவு நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பார்வையற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெறும்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக லயன்ஸ் சர்வதேச மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் கலந்து கொள்கிறார்.
CFC மற்றும் வெஸ்லி கல்லூரி மாணவர்கள், CFC கல்லூரி வாத்தியக் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். பாடசாலை மாணவர்களின் பங்கேற்பு இளைஞர்களிடையே பச்சாதாபம் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில் பார்வையற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் பரிசுகள் வழங்கப்படும்.
பிரதம விருந்தினராக
Lion G. ஷாஹிர் அஹமட் PMJF / PMAF
மாவட்ட ஆளுநர் – 306 D10
லயன்ஸ் இன்டர்நேஷனல் கலந்து சிறப்பிப்பார்.
கௌரவ விருந்தினர்களாக
திரு. S. ஜெகராஜன்
மேலதிக மாவட்டச் செயலாளர்,
மாவட்டச் செயலகம் – அம்பாறை
வைத்திய கலாநிதி G. சுகுணன்*
பணிப்பாளர்,
ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு)
வைத்திய கலாநிதி பிரதீபா பண்டார*
கண் சத்திர சிகிச்சை நிபுணர்,
ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு)
திரு. M.S. சஹுதுல் நஜீம்
வலயக் கல்விப் பணிப்பாளர்,
கல்முனை
திரு. T.M. மொஹமட் அன்சார்
பிரதேச செயலாளர்,
கல்முனை
திரு. T.J. அதிசயராஜ்
பிரதேச செயலாளர்,
கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) ஆகியோர் கலந்து கொள்வார்கள்.


