தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நிந்தவூர் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

நூருல் ஹுதா உமர்

தேசிய வாசிப்பு மாதம் – 2026 நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, நிந்தவூர் பிரதேச சபையின் மர்ஹும் அமீர் மேர்சா பொது நூலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பேச்சுப் போட்டி நேற்று (13) நூலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், பேச்சாற்றலை மேம்படுத்துதல், கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனை வளர்த்தல் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், நூலக அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், போட்டி நடுவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.