(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பிரஜாசக்தி செயற் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரசேத செயலக பிரிவுக்குட்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு, 5.3 மில்லியன் பெறுமதியான தையல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (13) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான், பிரஜாசக்தி தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.
பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், குடும்பங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


