நிந்தவூரில் விளையாட்டு உபகரணங்கள் ஆதம்பாவா எம்.பி.யினால் வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிந்தவூரை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

அதனடிப்படையில், மதீனா வி.க., இம்றான் வி.க., சவுண்டஸ் வி.க., புழு மவுண்டன் வி.க., அறபா வி.க. ஆகிய 05 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை, நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் இவ்விளையாட்டு உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லதீப், கணக்காளர் ஹாறூன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் சப்றி, நிந்தவூர் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களான தோழர் சம்சுன் அலி, இப்திகார் அஹமட், பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸவின் இணைப்புச் செயலாளர் தோழர் சத்தார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.