( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் 21வது மருத்துவ அணிக்கு 106 புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (7) புதன்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் உள்ள பேராசிரியர் த.வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட(மருத்துவ பீடம்) பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் அவர்களுக்கான விசேட வரவேற்புரையாற்றினார்.
முன்னதாக புதிய மாணவர்களுக்கான பதிவுகளை, சிரேஸ்ட உதவிப் பதிவாளர் எஸ்.சதீஸ் தலைமையிலான சௌக்கிய பீட உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.
சௌக்கிய விஞ்ஞான பீட பேராசிரியர்கள் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


