( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை சிதம்பரேஷ்வர நடனாலயம் (வவுனியா) மற்றும் தமிழ்நாடு கோயம்புத்தூர் குருகுல கல்வி நிலையம் இணைந்து நடாத்திய “நாட்டியாஞ்சலி” நிகழ்வில், காரைதீவு விபுலானந்தா நாட்டிய நிருத்தியாலய ஆசிரியை தக்ஷாளினி ஜெயகோபன் “நாட்டிய கலாபமயில்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
“இலங்கை நாட்டியாஞ்சலி 2026” நடன நிகழ்வு, 03.10.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட சேகரம் கலையரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலயம், காரைதீவு மாணவர்கள், “நுண்கலைமணி” ஜெயகோபன் தக்ஷாலினி தலைமையில் பங்கேற்று தமது அபாரமான நடனத் திறமையை வெளிப்படுத்தினர்.
14 மாணவர்களின் பங்கேற்பு
சுபாணன் புவேகா,
கேஜோரா சசிகுமார்,
மேகவர்ஷி சுவேந்திரன்,
பகிரதன் தன்சிகா,
நவேஸ்வரன் வரலக்ஷிகா, நவநீதன் சஞ்சனா,
ஐதர்ஷன் பிரவிஷ்னா, பிரபாகரன் டக்ஷயா,
சிவேவந்தன் ரோமிதா, செந்தமிழ்செல்வன் தில்ருக்ஷி, அற்புதநாதன் ரேமிதா, ஜெயகுமார் பிரின்ஸி,
தனுராஜ் டனிஷிகா மற்றும் சசிகுமார் டக்ஷயா ஆகிய 14 மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
“சக்தி – தாண்டவம்”
தமிழர் பாரம்பரியத்தின் ஆழத்தையும், ஆன்மீகத்தின் அதிர்வையும், நாட்டியக் கலையின் நுட்பத்தையும் ஒருங்கிணைத்த “சக்தி – தாண்டவம்” என்ற சிறப்புத் தலைப்பில் மாணவர்கள் வழங்கிய நடன நிகழ்வு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.


