( வேதசகா)
காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச ஆசிரியர் தின விழா நேற்று (8) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பெற்றோர்கள் சார்பில் திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக பாடசாலைப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெயநிலந்தினி மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக மாணவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்று ஆசி பெற்றனர் .
வரவேற்பு உரையை பெற்றோர் சார்பில் ஆசிரியை திருமதி நிறோ நிகழ்த்தினார். பெற்றோர் சார்பில் தேவப்பிரியன் சிறப்பாக கவிதை படித்தார்.
பெற்றார் திருமதி பிரேமவாஹினி நன்றியுரையாற்ற ஏ.பிரதீபா நிகழ்வைதொகுத்து வழங்கினார்.




