குருக்கள்மடத்தில் ஜனாஸாக்கள் தோன்றும் பணி மீண்டும் ஆரம்பம்.(Vedio)

கடந்த 90 ஆம் ஆண்டு புதைக்கப்பட்டதாக கருதப்படும் முஸ்லிம்கள் பலரது உடலங்கள் குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் தோன்றும் பணி இன்று ஆரம்பம்.

சுட்டு கொலை செய்யப்பட்ட பின்பு புதைக்கப்பட்டதாக சந்தேகித்து களுவாஞ்சிகுடி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடலங்கள் இருக்கும் என சந்தேகிக்கப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு குறித்த பகுதிகளில் உடலங்கள் காணப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளினாலும் ஏனைய துறை சார் அதிகாரிகளினாலும் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை தோண்டும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படுகிறது. குறித்த நிகழ்வுக்கு பிரதேச சபையின் பங்களிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற இடத்திற்கு களவிஜயத்தை மேற்கொண்டு தவிசாளர் அவர்கள் உரிய துறையினருக்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் சம்பந்தமாக ஆராய்ந்ததோடு அவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.