மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்ற கையடக்க தொலைபேசி திருத்துகின்ற பயிற்சிநெறியிலே கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்று வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் கிரீன் கார்டின் ஹோட்டலில் நடைபெற்றது.
கடந்த மூன்று மாதமாக நடைபெற்ற குறித்த பயிற்சியானது அம்மன் மகளீர் இல்ல பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொன்டான பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்று வந்தது குறித்த பயிற்சியை சிறந்த முறையிலே பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிரீன் காட்டில் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வில் பொண்டாளா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார் அதனோடு இணைந்து பிரதேச சபையினுடைய பிரதேச செயலாளர் மே.வினோராஜ் மற்றும் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






