(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு, தலா ரூபா ஒரு இலட்சம் (100,000) பெறுமதியான தையல் இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு கையளித்தார்.
பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் குடும்பங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் காணப்படுகிறது.
இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ. நஜீம் உட்பட பயனாளிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


