எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கான 2026ம் ஆண்டுக்கான மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று(01) ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில்,
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் ஒழுங்மைப்பில் இடம்பெற்ற நிகழ்வில், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், தவிசாளர் வி.மதிமேனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், உதவிப் பிரதேச செயலாளர் சி.கமல்ராஜ், கணக்காளர் தி.அம்பிகாபதி உட்பட பல்வேறு துறைசார் அதிகாரிகள், நிறுவன பிரதிநிதிகள், பிரதேச மக்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.
இக்கூட்டத்தின் போது, பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள், துறைசார் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு, எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னுரிமைத் திட்டங்கள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பிரதேச மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரச துறைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.


