நடுவானில் கத்திக்குத்து: தாக்குதலை எதிர்த்துப் போராடிய இந்திய விமானி

 

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற flydubai விமானத்தில், சக விமானியால் கத்தியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தலைமை விமானி, இந்தியரான ஸ்மித் மச்சார் (Smit Machchhar) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்த நிலையிலும், விமானத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைக்க முயன்றதாகக் கூறப்படும் துணை விமானியை அவர் எதிர்த்துப் போராடியதாகவும், விமானத்தில் சுமார் 180 பயணிகள் இருந்ததாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. 

சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பணியில் இல்லாத இரு விமானிகள், அதைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.