சூரிச்சில் நவம்பர் 1ஆம் திகதி ‘வெள்ளிவீதி’ இலக்கியக் கூடுகை

சூரிச்சில் நவம்பர் 1ஆம் திகதி ‘வெள்ளிவீதி’ இலக்கியக் கூடுகை: ஆறு படைப்பாளிகளுடன் உரையாடல்

Switzerland, சூரிச் நகரில் ‘வெள்ளிவீதி’ இரண்டாவது இலக்கியக் கூடுகை, எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

சூரிச் Wiedikon ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள Birmensdorferstrasse 67, 8004 Zürich என்ற முகவரியில் நடைபெறும் இந்நிகழ்வில், ஆறு படைப்பாளிகளுடனான உரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

காலை 9.30 மணிக்கு காலை உணவுடன் நிகழ்வு ஆரம்பமாகும். காலை 9.45 மணிக்கு கபிலன் தொடக்கவுரை ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் அமர்வுகளின் விபரம்:

  • காலை 10 மணி: காயத்ரி ஆர். — பொறுமையற்றவர்கள்
  • காலை 11 மணி: தில்லை — தாயைத்தின்னி
  • நண்பகல் 12 மணி: தர்மினி — கடூழி நட்சத்திரம்
  • பிற்பகல் 2 மணி: நவமகன் — ஆதிதம்
  • பிற்பகல் 3 மணி: பிரசாந்தி சேகரம் — வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு
  • பிற்பகல் 4 மணி: லிவிங் ஸ்மைல் வித்யா — அந்தம்

பிற்பகல் 1 மணிக்கு மதிய உணவு இடைவேளை வழங்கப்படும். மாலை 5 மணிக்கு தேநீருடன் நிகழ்வு நிறைவடையும்.

அமர்வுகளை அரவிந்த் அப்பாத்துரை, சயந்தன், இளவாலை விஜயேந்திரன், அசுரா நாதன், தேவ அபிரா மற்றும் ஷோபாசக்தி ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர். ஒவ்வோர் அமர்விலும் வாசகர்கள் தமது கேள்விகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

மேலதிகத் தொடர்புகளுக்கு: சயந்தன் — +41 79 519 24 29