Leukerbad அருகே சிறிய விமானம் விபத்து – மூவர் உயிரிழப்பு

Switzerland-ன் Valais Canton, Leukerbad அருகே செப்டம்பர் 15 செவ்வாய்க்கிழமை சிறிய விமானம் ஒன்று மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

Cirrus SR22T வகையைச் சேர்ந்த விமானம் Lugano-வில் இருந்து புறப்பட்டு, Sion விமான நிலையத்தில் இடைநிறுத்தம் செய்தது. பின்னர் Nidwalden Canton-ல் உள்ள Buochs விமான நிலையத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.

மாலை 4 மணிக்குப் பின்னர், இதுவரை தெரியாத காரணத்தால் விமானம் Leukerbad அருகிலுள்ள Fluhalp பகுதியின் வடக்கு மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் கடுமையான புகை எழுவதைப் பார்த்தவர்கள் அவசர சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு மீட்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் விமானத்தில் இருந்த மூவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய SUST – Swiss Transportation Safety Investigation Board விசாரணையை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, Bundesanwaltschaft Valais பொலிஸாருடன் இணைந்து குற்றவியல் விசாரணையையும் நடத்துகிறது.

தகவல் மூலம்: Kantonspolizei Wallis / PolizeiTicker