Ticino பள்ளிகளில் சீருடை? – புதிய யோசனை

Switzerland-ன் Ticino Canton பகுதியில் Kindergarten மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பள்ளிச் சீருடை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

FDP கட்சியைச் சேர்ந்த Ticino நாடாளுமன்ற உறுப்பினர் Michela Ris இந்த முன்மொழிவை கொண்டு வந்துள்ளார். மாணவர்கள் அணியும் விலையுயர்ந்த மற்றும் பிரபல நிறுவன ஆடைகள் காரணமாக குழந்தைகளிடையே பணக்காரர்–ஏழை என்ற வேறுபாடு தெரியக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம்.

இது கட்டாயமாக கோட், டை போன்ற சீருடையாக இருக்க வேண்டியதில்லை. ஒரே மாதிரியான Polo Shirt மற்றும் கால்சட்டை போன்ற எளிய உடையாகவும் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

ஒரே இடத்தில் அதிக அளவில் ஆடைகளை வாங்கினால், விலையுயர்ந்த Brand ஆடைகளை வாங்குவதைவிட பெற்றோரின் செலவும் குறையலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் இதற்கான செலவை யார் ஏற்க வேண்டும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. Kindergarten மற்றும் ஆரம்பப் பள்ளிகள் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இருப்பதால், நகராட்சிகளுக்கும் கூடுதல் செலவு ஏற்படலாம்.