டிசம்பரில் 13வது AHV – சராசரியாக CHF 1,580
Switzerland-இல் 13வது AHV ஓய்வூதியம் 2026 டிசம்பரில் முதல் முறையாக வழங்கப்பட உள்ளது. இதன் சராசரித் தொகை சுமார் CHF 1,580 என மத்திய சமூக காப்புறுதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் அனைவருக்கும் CHF 1,580 கிடைக்காது; ஒவ்வொருவருக்கும் அவரவர் AHV உரிமைக்கு ஏற்ப தொகை மாறுபடும்.
Switzerland-இல் வசிக்கும் ஓய்வூதியதாரர்களின் சராசரி மாத AHV சுமார் CHF 1,969 ஆக உள்ள நிலையில், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் சராசரி சுமார் CHF 702 மட்டுமே. பலர் Switzerland-இல் குறைந்த ஆண்டுகள் மட்டுமே வேலை செய்து AHV செலுத்தியிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஒருவரின் AHV தொகை அவர் எத்தனை ஆண்டுகள் பங்களிப்பு செலுத்தினார், அவரது சராசரி வருமானம் எவ்வளவு என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. முழுமையான பங்களிப்புக் காலம் 44 ஆண்டுகள். 2026-இல் முழு AHV ஓய்வூதியம் மாதம் குறைந்தபட்சம் CHF 1,260 முதல் அதிகபட்சம் CHF 2,520 வரை உள்ளது.
எனவே, வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் தகுதி இருந்தால் 13வது AHV கிடைக்கும். ஆனால் அனைவருக்கும் ஒரே தொகை கிடைக்காது. அவரவர் AHV உரிமைக்கு ஏற்ப தொகை வழங்கப்படும்.


