சுவிட்சர்லாந்தில் Tip-க்கு வரி இல்லை – ஆனால் AHV ஓய்வூதியத்தில் பாதிப்பா?

பேர்ன்: உணவகங்கள் உள்ளிட்ட சேவைத் துறைகளில் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் Trinkgeld (Tip) மீது வரி மற்றும் சமூகக் காப்புறுதி பங்களிப்புகளை விதிக்க வேண்டாம் என சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. பணமாக மட்டுமன்றி Credit Card அல்லது TWINT மூலம் வழங்கப்படும் Tip-களுக்கும் இந்த அணுகுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை Gastro துறை வரவேற்றுள்ளது. Tip என்பது சம்பளத்தின் ஒரு பகுதி அல்ல; சிறந்த சேவைக்காக வாடிக்கையாளர் தன்னார்வமாக வழங்கும் பரிசு என SVP மாநிலங்களவை உறுப்பினர் Esther Friedli வாதிடுகிறார்.

ஆனால் SP தேசிய சபை உறுப்பினர் Barbara Gysi இதை “சமூகப் பாதுகாப்பில் பின்னடைவு” என விமர்சித்துள்ளார். Tip மீது AHV உள்ளிட்ட சமூகக் காப்புறுதி பங்களிப்புகள் செலுத்தப்படாவிட்டால், குறிப்பாக குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எதிர்கால AHV ஓய்வூதியம், IV நலன்கள் மற்றும் சில சமூகக் காப்புறுதி கொடுப்பனவுகள் குறையக்கூடும் என்பது அவரது வாதம்.

எனவே ஊழியர்களுக்கு தற்போது கையில் கிடைக்கும் தொகை அதிகரிக்கலாம்; ஆனால் நீண்டகால சமூகப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து அரசியல் விவாதம் தொடர்கிறது.

தகவல் மூலம்: சுவிஸ் நாடாளுமன்றம்