மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர்கள் 2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவம் வழக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அன்டன் வெணடிக் ஜோசப் அவர்களின் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று (09) இடம் பெற்றது.

கல்லூரியில் இருந்து இம்முறை 139 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், அவர்களில் 62 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச் சாதனை படைத்துள்ளனர்.

இது மொத்த மாணவர்களின் 44.6 சதவீதமாகும். மேலும், 100 புள்ளிகளுக்கு மேல் 114 மாணவர்கள் பெற்றுள்ளதுடன், 70 புள்ளிகளுக்கு கீழ் 3 மாணவர்கள் மாத்திரமே பெற்றுள்ளனர்.

கல்லூரியின் மொத்த சித்தி வீதம் 98 சதவீதமாக பதிவாகியுள்ளது. இம்முறை மாணவர்களால் பெறப்பட்ட அதிகூடிய புள்ளி 175 ஆகும்.

மாணவர்களின் இந்தச் சிறப்பான பெறுபேற்றுக்கு அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 2026 பெறுபேறுகள் செப்டம்பர் 2026 இல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மாணவர்கள் தமது பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட கல்வி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்