அண்மைக்காலமாக இலங்கையில் இந்து மதத்திற்கு தலைமைத்துவம் இல்லை என்பது பேசு பொருளாக அமைந்திருந்தது. அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பீடங்களை அமைக்கலாம் என்ற என்னப்பாட்டுடன் ஊடகங்கள் ரீதியாக அவதானிக்க கூடியதாக இருந்தது இதனையிட்டு கலாநிதி பாபு சர்மா தெரிவிக்கையில் யார் யார் அமைப்புகள் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தங்களுக்குரிய அதிகாரத்திற்க்குரிய தலைமைத்துவத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் தங்கள் சேவைகளை சிறப்பாக செய்து வருவதை இலங்கையில் இந்து மத ரீதியாக அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தற்போது இந்து மத பீடம் அமைப்பதற்கு சில அமைப்புகள் முன் வந்திருக்கின்றன. ஆனால் அது குறித்த பகுதிகளை மட்டும் சாராது இலங்கை முழுவதும் இருக்கின்ற இந்துக்கள் அடங்கலாக உறுப்பினர்கள் தெரிவு செய்து அந்த உறுப்பினர்கள் ஊடாக ஒரு தலைமைத்துவத்தை தேர்வு செய்வது சிறப்பானது
ஒரு குறித்த அமைப்பு தேர்வு செய்யப்படுமாக இருந்தால் ஏனைய அமைப்புகள் அதற்கு உடன்பாடு காட்டாவிடில் அவர்களால் இயங்க முடியாது இன்று நல்லை ஆதீனம் சுவாமி மறைந்ததன் பின்னர் அது வறுமையாகவே இருக்கிறது அங்கு சுவாமிகள் இல்லை இப்படியான நிலவரம் தான் இலங்கையில் இருக்கிறது இந்தியாவிலிருந்து சுவாமிகளை அழைத்து செயற்படக்கூடிய தன்மை இருந்தும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை அதேபோன்றுதான் இந்து மதத்திற்கான தலைமத்துவம் அந்தண சிவாச்சாரியர்களே பொருத்தமானவர்கள். அவர்கள் நாளும் முழுதும் இறைவனுடன் இருப்பவர்கள் மக்களுடன் பழகுபவர்கள் அவர்கள் அந்த உணர்வுகளை உணரகூடிய வல்லமை இருக்கிறது. மற்றவர்களை அரவணைக்கும் குணமும் அவர்களிடம் நிரம்பி இருக்கிறது .அந்த வகையில் அந்தண தலைமைத்துவம் கொண்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிவாச்சாரியார்களை உள்ளடக்கி ஒரு பீடத்தை உருவாக்குவதே சிறப்பானது பௌத்த மதத்தில் பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ மதத்தில் அருட்தந்தைமார்கள் இஸ்லாமிய மதத்தில் மௌலவிமார்கள் அதேபோன்று இந்து மதத்தில் அந்தணர்கள் தான் தலைமைத்துவத்தில் இருக்க வேண்டும் என்பது எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பும் .அந்த வகையில் குறித்த அமைப்பைச் சாராது இலங்கை முழுவதும் உள்ளடங்கிய ஒரு பொதுவான அமைப்பை உருவாக்கி அதனை அரச அங்கீகாரம் பெற செய்வதே சிறப்பான வழி ஆகும் என கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.


