இன்று பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபட கலந்துரையாடல்!

( வி.ரி.சகாதேவராஜா)
பேராதனை பல்கலைக்கழகத்தில் 1983/84 வருடங்களில் கற்ற அணியினர் இணைந்து சமூக சேவையில் ஈடுபடுவதற்கு வசதியாக காரைதீவில் ஒன்றுகூடலை முன்னெடுத்தனர்.

இதற்காக கனடாவில் இருந்து காரைதீவுக்கு வந்த வ.வசந்தாதித்தன் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் இன்று (8) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது.

கண்டி தொடக்கம் திருகோணமலை வரையுள்ள பிரதேசங்களிலிருந்து 25 க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.

பல சமூக சேவை வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.