உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை – விந்துலா கம்மன்பிலவின் ஆய்வுக்கு சிறந்த விருது

ஹொங்கொங்கில் நடைபெற்ற 12வது உலக நிலைத்தன்மை மாநாட்டில் (12th World Sustainability Conference) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விந்துலா கம்மன்பில, தான் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக ஆண்டின் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான விருதை வென்றுள்ளார்.

ஆகஸ்ட் 21 முதல் 24 வரை ஹொங்கொங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகின் பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 500க்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர் என Lankadeepa தெரிவிக்கிறது.

விந்துலாவின் ஆய்வு, மின்சாரத் துறையில் பசுமை ஆற்றல் முறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் புதிய அணுகுமுறைகளை நிலைத்தன்மையுடன் மதிப்பிடுவதற்குத் தேவையான கொள்கைக் கட்டமைப்பு தொடர்பானதாகும்.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்; தற்போது அங்கு ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். மேலும் சட்டப் பட்டமும் பெற்றுள்ள அவர், கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியாகவும் பணியாற்றுகிறார்.