நேபாளம்–திபெத் எல்லையில் பேரழிவு: 273 பேர் பலி – 1,300க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லையிலுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 273 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 270 பேரும், திபெத்தில் 3 பேரும் உயிரிழந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,300க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களில் Switzerland நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

நேபாள இராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 336 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளது; அவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள். சுமார் 4,000 இராணுவத்தினர் தேடுதல், மீட்பு மற்றும் அவசர மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், வெள்ளத்துக்குப் பின்னர் நேபாளப் பகுதியில் புதிதாக உருவான ஏரியில் சுமார் 2 மில்லியன் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளதாகவும், மேலும் நீர் சேரக்கூடும் என்பதால் அணை உடைந்து மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்