*சுதந்திரத்துக்குப் பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும்*.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் எதிர்க்கட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்குச் சேவையாற்றவில்லை. வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்குச் சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே திகழ்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று கலேவெல, தேவாஹவ 11 ஆம் பிரிவில் உள்ள சன்செத மக்கள் அமைப்பினர் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நீர் சுத்திகரிப்புத் தொகுதியை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவர் தெரிவித்தார்.

இருந்த போதும், நெல் கிலோவொன்றுக்கு 150 ரூபா நிலையான விலையை வழங்கி அதைச் சட்டமாக்குவதாகக் கூறியே ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் இதுவரை அதற்கான சட்டமூலங்கள் எவையும் கொண்டுவரப்படவில்லை. இன்று ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகின்றது என விவசாய அமைச்சரே கூறியுள்ள போதிலும், அரசாங்கத்தின் உத்தரவாத விலை 120 ரூபாயாகவே உள்ளது. இதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் விவசாயிக்கு ஒரு கிலோ நெல்லில் 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட போதிலும் அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்வதில்லை. சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்த 7,500 மில்லியன் ரூபாயை ஒதுக்கிய போதிலும் நெல் கொள்வனவு செய்யப்படவில்லை. ஆனால், நெல் கொள்வனவு செய்வதாகக் கூறும் விளம்பரப் பலகைகள் கிராமங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 25 இலட்சம் மெட்ரிக் தொன்னாக இருக்கையில், 32 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறான மேலதிக உற்பத்தி கையிருப்பு இருக்கையில், அரசாங்கம் 382,000 மெட்ரிக் டொன் அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விவசாய மக்களுக்கு பாரிய துரோகத்தைச் செய்துள்ளது.
நெல், சோளம், உருளைக்கிழங்கு என அனைத்துத் துறைகளிலும் விவசாயிகள் அநாதரவாக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெறும் நீதிபதிகளின் வயதை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முதன்மைத் தீர்வாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.