மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56வது வருடாந்த மாநாடு இன்று (22) மண்முனை தென்மேற்கு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ஆ.பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கல்வி ரீதியாக புரிந்த சாதனைக்காகவும், 2001ம் ஆண்டு நியமனம் பெற்று 25 வருடங்கள் பூர்த்தி செய்த கிராம உத்தியோகத்தர்கள், ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிருவாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் க.சிவகுருநாதன் தலைவராகவும், மண்முனை பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களான கோ.பஞ்சாட்சரம் செயலாளராகவும், செ.டிலக்சன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் J.S அருள்ராஜா பிரதம அதிதியாகவும், மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் நே.ரேகன் விசேட அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் ஆகியோர்களும் வருகை தந்திருந்தனர்.











