லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படவுள்ள கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், முதலாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.