மட்டக்களப்பில் வரட்சியால் நாளாந்த நீர் வெட்டு அமுல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 22ஆம் திகதி முதல், நாளாந்தம் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை சுமார் நான்கு மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இந்த நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, நீர்ப்பாவனையாளர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.