எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் நேற்று (19.08.2026 ) இலவச வைத்தியமுகாம் இடம்பெற்றது.
பிரதேச செயலக விதாதா வள மண்டபத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நடாத்தப்பட்டதுடன் உத்தியோகத்தர்களின் குருதி அமுக்கம் , நிறை என்பன பாரீட்சிக்கப்பட்டது.
இதன் போது
புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களினால் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.


