தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நன்கொடையாளரின் உதவியில் உதவி;க்கரம்.

( வாஸ் கூஞ்ஞ) 17.08.2026

பிரதேச- கிராமிய ஊடகவியலாளர்களின் பங்களிப்பானது மிகவும் சிறந்தது ஒன்றாகும். இவ்வாறான ஊடகவியலாளர்களை மென்மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் இவர்களை பாராட்டும் முகமாகவும் இவர்களுக்கான ஊடகத்துக்கான உபகரணங்கள் வழங்கும் முகமாக கொழும்பில் உள்ள மிராஜ் ஹொட்டலில்; ஞாயிற்றுக் கிழமை (16.08) காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

யுத்தக்காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் சொல்லொண்னா துன்பங்களுக்கு உள்ளாகியபோது இவர்களுக்காக குரல் கொடுப்பதற்கு யாரும் அற்ற நிலையில் இருந்த வேளையில் பாதிப்புகளுக்கு உள்ளாகிய தமிழ் ஊடகவியலாளர்களுக்காக குரல் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் தமிழ் ஊடக ஒன்றியம் ஒன்று உருவாக வேண்டும் என்று இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்பு உருவாகிய இந்த தமிழ் ஊடக ஒன்றியமானது இலங்கை பூராகவும் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 90 தமிழ் ஊடக ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களின் ஊடகத் தொழிலுக்கான பெறுமதி மிக்க கனணி மற்றும் கையடக்க தொலைபேசி உபகரணங்கள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

தமிழ் ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது இதன் தலைவரும் வீரகேசரியின் நாளிதழ் மற்றும் ஞாயிறு வாரப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியருமான எஸ்.ஸ்ரீகஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிழ்வில் எக்ஸ்பிரஸ் நீயூஸ் பேப்பர் சிலோன் லிமிட்டட் (பிறைவேட்) நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் செந்தில்சாதன்- வைத்திய அதிகாரி வீரசுதன்- பல பத்திரிகைகளுக்கு செய்தி ஆசிரியராகவும் தற்பொழுது முரசு பத்திரிகைக்கு செய்தி ஆசிரியராகவும் கொண்ட திரு வித்தியானந்தன் உட்பட தமிழ் ஊடகவியலாளர்களின் நிர்வாகதத்pனர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரதேச மட்டங்களில் தமிழ் ஊடகவியலாளர்களின் தொழிலுக்கான உபகரணங்களின் தேவைகளை உணர்ந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவானது எடுத்துக் கொண்ட முயற்சியால் லண்டனில் புலம்பெயர்ந்து வாழுபவரும் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும்- லண்டனில் தொழில் அதிபரும் நாட்டுப் பற்றுடன் கல்விக்காகவும் மேலும் உதவிகள் பல புரிந்து வரும் ஜீவரெட்ணம் முறேஷ் அவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் உதவிகள் புரியும் நோக்குடனே இந்த உதவிகளை மேற்கொண்ட நிகழ்வாகவே இது அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாள்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நன்கொடையாளரை தமிழ் ஊடக ஒன்றிய நிர்வாகமும் கலந்து கொண்டோரும் சிறப்பான வரப்பேற்பையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.