சூரிச் நகரில் சுமார் 36,750 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை புதிய கல்வியாண்டை ஆரம்பிக்கவுள்ளனர். இவர்களில் சுமார் 22,000 பேர் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் ஆவர்.
புதிய கல்வியாண்டுடன் Zürichberg பகுதியில் Sekundarschule Krähenbühl என்ற புதிய பாடசாலையும் திறக்கப்படவுள்ளது. முன்னர் Meteo Schweiz பயன்படுத்திய கட்டிடம் புனரமைக்கப்பட்டு பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பமாவதால் வீதிகளில் சிறுவர்களின் நடமாட்டம் அதிகரிக்கும் என்பதால், வேகத்தைக் குறைத்து மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு சூரிச் நகர மற்றும் கன்டோன் பொலிஸார் வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

