இலங்கை தீவுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24மணித்தியாலங்களுக்கான தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு.

அடுத்த 24 மணித்தியாலங்களில் (2026.08.08), கற்பிட்டி ஊடாகச் சிலாபம் முதல் மன்னார் வரையிலும், அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவோ அல்லது அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது