திருச்செந்தூரில் ஆடி கிருத்திகை பால்குட பவனி;1008 சங்காபிஷேகம்

(வி.ரி.சகாதேவராஜா)
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008 சங்கா ஆபிஷேக நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்க பேரணியை அலங்கரிக்க அதிக அளவிலான பெண் அடியார்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதம் இருந்து மட்டக்களப்பு பிரதான வீதிகளூடாக பால்குடப்பவனியில் கலந்து கொண்டு திருச்செந்தூர் முருகன் ஆலய வரை கால்நடையாக தலையில் பால் குடத்தை ஏந்தி ஆலயத்தை வந்தடைந்தனர்.

அங்கு 1008 சங்கா அபிஷேகங்கள் வழிபாடுகள் இடம் பெற்றது.
பின்பு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. ஆடி கிருத்திகை முன்னிட்டு விசேட பூஜைகளும் தாக சாந்தி நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது.