(வாஸ் கூஞ்ஞ)
மாணவர்களால் புத்தாக்கம் செய்யப்பட்டதை மன்னார் மாவட்ட மாணவர்களும் கண்டுணர்ந்து தாங்களும் இவ்வாறு புதிய புத்ததாக்கத்தில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் மன்னார் நகர சபை மண்டபத்தில் யாழ்ப்பாணம் வைஜிசீ என்ற ‘யார்ல் ஐரி ஹப்’ என்ற நிறுவனம் கண்காட்சி நிகழ்வை நடாத்தியபோது பெருந் தொகையான மாணவர்கள் கண்டுகளித்தனர்.
யாழ்ப்பாணம் வைஜிசீ என்ற ‘யார்ல் ஐரி ஹப்’ என்ற நிறுவனம் கடந்த 15 வருடங்களாக யாழ் பகுதியில் இயங்கிக் கொண்டு வருகி;ன்றது. இதன் நோக்கம் மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத் திருவிழாவை கொண்டாடி மாணவர்களை ஊக்கப்படுத்துவதாகும்.
இவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தாக்கங்களை காட்சிப்படுத்தி மாணவர்கள் சமூகத்திற்கு ஒரு புத்துணர்வை எற்படுத்தி இதை மாணவர் சமூகம் கவனித்து அவர்களும் இதே மாதிரி புத்தாக்கம் செய்வதற்கான வழிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிறுவனதத்pன் செயற்பாடு 15 வருடங்களாக இருக்கின்றபோதும் இந்த நிகழ்வுகளை யாழ்ப்பாணத்திலே மேற்கொண்டு வந்துள்ளது எனவும் ஆனால் இப்பொழுது வட மாகாணதத்pலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ சமூகம் நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் தற்பொழுது யாழ் மாவட்டத்திலிருந்து ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் இந்த செயற்பாடு விரிவுப்படுத்தியுள்ளது
அதாவது கிளிநொச்சி- முல்லைத்தீவு- வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படத்தப்பட்டு வருகின்றது. இது தற்பொழுது இந்த வருடத்திற்கான நிகழ்வுகளை கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா அகிய மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (06.08) மன்னாரில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு பாரிய நிகழ்வாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் நடாத்தப்படும் இந்த புத்தாக்க செயற்பாடுகளை மாவட்ட மாகாண மற்றும் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கும் திட்டமாகவும் இது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தனிப்பட்ட மாணவர்களின் _ஐரி’ சம்பந்தமாக மட்டும் அல்லாது மகளீர் மற்றும் கைத்தொழல் சம்பந்தமான விடயங்களும் அதாவது உள்ளுர் உற்பத்திகள் பனை- தென்னை ஓலை கைத்தொழில் நெசவு- தையல் இவ்வாறான அம்சங்கள் இந்த கண்காட்சி நிகழ்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனதத்pன் செயற்பாடுகள் பற்றி மன்னார் மாவட்ட மாணவர்கள் சமூத்தினர் மட்டில தெரியாதிருந்தபோதும் ஒரு வருடமாகத்தான் இங்கு தெரியவந்துள்ளமையால் எதிர்காலத்தில் இங்குள்ள மாணவர்கள் புத்தாக்க விடயத்தில் அக்கறை கொள்ளக்கூடிய நிலை எற்படும் என தெரிவிக்கப்பட்டதுடன்
கைத்தொழில் உற்பத்தியாளர்களும் இந்த கண்காட்சி ஊடாக தங்கள் உற்பத்திப் பொருட்களையும் விரிவுப்படுத்தவும் விற்பனை செய்யக் கூடிய நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பெருந் தொகையான மாணவர்கள் வருகை தந்து அறிவுசார்ந்த மாணவர்களால் புத்தாக்கம் செய்யப்பட்டதை கண்காட்சிக்காக வைக்கப்பட்டு அதற்கான விளக்கங்களையும் வழங்கியதையும் பார்வையிட்ட மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்களை அளிக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3.30 மணிவரை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


