( வாஸ் கூஞ்ஞ) 06.08.2026
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்இ மடு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச பண்பாட்டுப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழாவும் ‘மடுக்கீற்று’ பிரதேச மலர் வெளியீட்டு நிகழ்வும் புதன்கிழமை (05.08) பெரியபண்டிவிரிச்சான் மரிய கொறற்றி தேவாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மடு பிரதேச செயலாளர் இ. கி. அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்சன் சிறப்பு விருந்தினராகவும் மன்னார் மாவட்ட சிரேஷ்ட உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் மற்றும் மண் கலைச்சுரபி வாரித்தம்பி நவரத்தினம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.
மேலும்இ பெரியபண்டிவிரிச்சான் பங்குத்தந்தை பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பிரதேச கலைஞர்கள் பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ‘மடுக்கீற்று’ சிறப்பு நூல் வெளியீடு கலைஞர்களுக்கான கௌரவிப்பு மற்றும் கலைமன்றப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.


