வடக்கு – கிழக்கு காணி விடுவிப்பு: பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறைச் சிக்கல்களும்

வடக்கு – கிழக்கு காணி விடுவிப்பு: பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், சுட்டிக்காட்டப்பட்ட நடைமுறைச் சிக்கல்களும்கொழும்பு:வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை எவ்வித நிபந்தனையுமின்றி, உடனடியாக அவர்களின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சரிடம் தொடர் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.பாராளுமன்ற நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையான விவாதத்தை முன்னெடுக்க முடியாவிட்டாலும், பாதுகாப்பு அமைச்சரின் பதில்களில் காணப்பட்ட நடைமுறைக்கு மாறான விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டு, நிபந்தனையற்ற நிரந்தரத் தீர்வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘அதியுயர் பாதுகாப்பு வலயம்’ தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடுபாதுகாப்பு அமைச்சர் தனது பதிலில் “அதியுயர் பாதுகாப்பு வலயம்” (High Security Zone) என்ற காரணியைக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சார்ந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், யுத்த கால சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பிரகடனப்படுத்தப்பட்ட இத்தகைய பாதுகாப்பு வலயங்களை தற்போதைய சூழலில் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே பிரதான கருத்தாக எட்டப்பட்டது இங்கு நினைவுகூரப்பட்டது. மதத் தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான அனுமதி

உண்மைக்குப்புறம்பான தகவல்கள்பலாலி (J252 முதல் J256 வரை) மற்றும் மயிலிட்டி (J246, J248, J257) பகுதிகளில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியும் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டுத் தலங்கள்: புனித செபஸ்தியார் தேவாலயம், வாசவிளான் செங்குந்த விநாயகர் கோயில், மண்ணம்பிராய் பிள்ளையார் கோயில், மயிலிட்டி கன்னிக்கன் மாதா கோயில் ஆகியவை இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு மீள ஒப்படைக்கப்படவில்லை.பாடசாலைகள்: மயிலிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, வாசவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலையே தொடர்கிறது. குறிப்பாக, புனித செபஸ்தியார் தேவாலயம் இருந்த இடமே இன்று அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபடலாம்.

எனக் கூறுவது உண்மைக்குப்புறம்பான தகவல் என சுட்டிக்காட்டப்பட்டது. காணிகளுக்குப் பணம் கோரும் நடைமுறைக்குக் கடும் எதிர்ப்பு காணி கோரி விண்ணப்பித்துள்ள 44 உரிமையாளர்களில் வெறும் 11 பேருக்கு மட்டுமே காணிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற அணுகுமுறை என விமர்சிக்கப்பட்டது.மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் காணிகளில் இராணுவத்தினர் கட்டடங்களை நிர்மாணித்துவிட்டு, பின்னர் அக்காணிகளை விடுவிக்க உரிமையாளர்களிடமிருந்து சுமார் 80 இலட்சம் ரூபாய் கோரப்படும் நடைமுறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உரிமையாளரின் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டிவிட்டு, அதற்கு உரிமையாளரையே பணம் செலுத்தச் சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத சட்டவிரோதமான செயற்பாடாகும்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய வினாக்கள் மொத்தக் காணிகளின் விபரம்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அசல் மற்றும் அரச காணிகளின் மொத்தப் பரப்பளவு எவ்வளவானது?விடுவிக்கப்பட்ட காணிகள்: தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் பரப்பளவு, அவற்றின் அமைவிடம் மற்றும் விடுவிக்கப்பட்ட திகதிகள் எவை? காலவரைறை: எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலவரைறை என்ன?

வலிகாமம் வடக்கு: 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாகவும், 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பகுதியளவிலும் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில், இவற்றை முழுமையாக விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கோரிக்கைகள்: மயிலிட்டி மற்றும் பலாலிப் பகுதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் மற்றும் பாடசாலைக் காணிகளை மீட்டெடுக்க எடுத்த நடவடிக்கைகள் எவை? கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கம், 551 பிரிவுப் பகுதி காணிகள், இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோயில் சூழல், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களக் காணிகளை விடுவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை?

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் சிவில் காணிகளை விடுவிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?முக்கிய கோரிக்கைவடக்கு மற்றும் கிழக்குவாழ் மக்களின் பூர்வீகத் தனியார் காணிகள் எவ்வித தாமதமுமின்றி, எந்தவித நிபந்தனைகளும் இன்றி அவர்களின் உரிமையாளர்களிடம் உடனடியாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த காணிப் பிரச்சினைக்கு நீதி, சட்டம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.