மட்டக்களப்பு மாவட்ட மட்டப் ஆங்கில தினப் போட்டியின் இறுதி நாள் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (04ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி, கல்குடா, பட்டிருப்பு ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
மாகாண மட்டப் போட்டிக்கான மாணவர்களைத் தெரிவு செய்யும் வகையில் இப்போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மூன்று நாட்களாக இப்போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றமையுடன், இறுதி நாள் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஏனைய வலயங்களின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









