விசேட தேவைப்பாடு உடையவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு கிரீன் கார்டுன் விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணம் எங்கும் சேவையாற்றத்தக்க வகையில் குறித்த மாவட்டம் மற்றும் மாகாணத்தில் காணப்படுகின்ற விசேட தேவைப்பாடு உடையவர்களுடைய நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்படுகின்ற அம்மையப்பன் கட்டிட நிர்மாண பணி தொடர்பாகவும் அதன் எதிர்கால செயற்பாடுகள் பற்றியுமான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய (31) தினம் மட்டக்களப்பு கிரீன் கார்டுன் விடுதியில் நடைபெற்றது.

குறித்த கட்டுமான பணிக்கு புலம்பெயர் அமைப்புகளும் எமது நாட்டில் இருக்கின்ற கொடையாளிகளும் தங்களுடைய அன்பளிப்புகளை வழங்கி குறித்த செயல் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையிலே பதிவு செய்யப்பட்டு இயங்குகின்ற டேட்டா செரிடி (Data Charity) என்கின்ற நிறுவனம் குறித்த கட்டுமான பணிகளை மூன்று படிமுறைகளாக மேற்கொண்டு வருகின்றது. இந்த செயற்பாட்டிற்கு புலம்பெயர் தேசத்திலே பதிவு செய்யப்பட்டு இயங்குகின்ற தமிழ் பெற ஸ்போர்ட்ஸ் (Tamil para sports) எனும் தொண்டு நிறுவனம் பல்வேறு வகைகளில் உதவிகளை செய்வதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி இரு நிறுவனங்களும் உள்நாட்டு வெளிநாட்டு உறவுகளின் உதவிகளுடன் செயற்படுகின்றது.

கட்டுமான செயற்பாடுகள் அனைத்தும் முறையான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு அதற்குரிய நிபுணர்களின் ஆலோசனைகளுடனும் அவர்களுடைய மேற்பார்வையுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த அம்மையப்பன் விசேட தேவை உடையோருக்கான காப்பகத்திற்கு கொடைகளை வழங்கக் கூடியவர்கள் தங்களுடைய கொடையினை வழங்கலாம் என்பதோடு இந்த நிறுவனத்தினுடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் மிகவும் எதிர்பார்ப்பதாக இன்றைய தினம் ஊடக சந்திப்பில் பங்குபற்றியதிட்டத்தினுடைய திட்டப்பணிப்பாளர் மற்றும் டேட்டா செரிடி நிறுவனத்தின் உடைய பணிப்பாளர்களும் அதனுடைய உத்தியோகத்தர்களும் தங்களுக்கான பணிகள் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் தற்போது தங்களினால் விசேட தேவை உடையவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற சேவைகள் பணிகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.