கடத்தலில் கைப்பற்றப்பட்ட 14072 கடலட்டைகள் 28 இலட்சத்து 28 ஆயிரத்து 472 ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

( வாஸ் கூஞ்ஞ) 01.08.2026

கடந்த செவ்வாய் கிழமை (28.07) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந் தொகையான கடலட்டைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவைகள் ஏலத்தில் விடப்பட்டு 28 இலட்சத்து 28 ஆயிரத்து 472 ரூபா பெறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை (28.07) இந்தியாவிலிருந்து மன்னார் தென் கடல் ஊடாக மன்னாhருக்கு சட்டவிரோதமாக மூன்று படகுகளில் கொண்டு வரப்பட்ட 14072 கடலட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளையும் இவற்றுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களையும் 14072 கடலட்டைகளையும் இச்சந்தேக நபர்கள் வசம் இருந்த இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடற்படையினர் மன்னார் கடற்தொழில் நிரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இக்கடலைட்டைகள் சந்தேக நபர்கள் மற்றும் தடயப் பொருட்களை மன்னார் கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து தடயப் பொருட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் கைப்பற்றப்பட்ட கடலட்டைகளை மன்று ஏலத்தில் விடுவதற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இக்கடலைட்டைகள் கொழும்பிலிருந்து வருகைத் தந்திருந்த இத்திணைக்கள அதிகாரிகளின் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 14072 கடலட்டைகளையும் துள்ளுக்குடியிருப்பு பகுதியிலுள்ள கூல் மேன் இடத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (31.07) ஏலத்தில் விடப்பட்டது.

இவற்றை ஒரு கடலட்டையை 201 வீதம் 14072 கடலட்டைகளையும் ஒரு கம்பனி 28 இலட்சத்து 28 ஆயிரத்து 472 ரூபாவுக்கு ஏலத்தில் பெற்றுள்ளது.