(வாஸ் கூஞ்ஞ)
வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்குப்படுத்தலின் கீழும் மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (28.07) ஆரம்பிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான தலைமன்னாரிலிருந்து மன்னார் வரைக்குமான சிசுசெரிய சேவைக்கான வழித்தடமானது
காலை 06.15 மணிக்கு தலைமன்னார் கிராம பேரூந்து தரிப்பிடத்திலிருந்து புறப்பட்டு தலைமன்னார் பியர்- தலைமன்னார் ஸ்டேசன்- கட்டுக்காரன்குடியிருப்பு- துள்ளுக்குடியிருப்பு- பேசாலை- சிறுத்தோப்பு- கரிசல் வரை பிரதான வீதியில் பயணம் செய்து ஓலைத்தொடுவாய் கோவில் சந்தி உட்சென்று மாணவர்களை எற்றிக் கொண்டு மீண்டும் புதுக்குடியிருப்புபிரதான வீதியில் பயணம் செய்து தோட்டவெளி தோப்பு வழியாக உட்சென்று தோட்டவெளி பாடசாலை மாணவர்களை ஏற்றி தோட்வெளி நுழைவாயில் ஊடாக பிரதான வீதியினை அடைந்து எருக்கலம்பிட்டி சந்தி- தாராபுரம் சந்தி- மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி- மன்னார் புனித சவேரியார்பெண்கள் கல்லூரி- மன்.அல்அஹார் தேசிய பாசாலை மற்றும் மன்.சித்திவிநாயகர் இந்து கல்லூரியுடன் நிறைவடையும் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


