தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு எம்பிக்கள் விஜயம்

( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், மருத்துவர் இ.சிறிநாத் ஆகியோர் நேற்று விஜயம் செய்தனர்.

ஆலய பரிபாலன சபையின் செயலாளரும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினருமான செ.ஸ்ரீதரனின் ஒருங்கிணைப்பில் மற்றும் ஆலய நிர்வாகிகளின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் ஆலயத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

​ஆலயத்தில் தற்போது இடம்பெற்று வரும் வருடாந்த மகோற்சவ பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

​இதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

​இவ் விஜயத்தின் போது, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி திரேசகுமாரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான .த.பிரபாகரன், கா.நாகேந்திரன்,.நா.கஜேந்திரன், ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பத்ம நிலோஜ ஈசான சிவம், ஆலயத் தலைவர்இ.தட்சணாமூர்த்தி, பொருளாளர் தா.ஜெயராம், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.