(வி.ரி.சகாதேவராஜா)
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (27) திங்கள் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்திற்கு நேரில் களவிஜயம் செய்தார்.
அங்கு அவர் கொள்வனவுச் செயற்பாடுகள், நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிரதேசத்தின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த விவசாயிகள் தங்களது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் ஒப்படைத்தனர்.
இதேவேளை, திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தம்பட்டை 02 நெற்களஞ்சிய சாலையில் அரசாங்கத்தின் 2026 சிறு போக நெல் கொள்முதல் வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பிரதம அதிதியாக கரையோர பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபமா மங்கள விக்ரமராச்சி கலந்துகொண்டு ஆரம்பித்தது வைத்தனர்


