கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பாதயாத்திரையாக வரும் பக்த அடியார்கள், ஊகந்தை மலை முருகன் ஆலயத்தை நோக்கிச் சென்றவண்ணம் உள்ளனர்.
இது குறித்து இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கதிர்காம யாத்திரிகர்களின் பாதுகாப்பு சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு:
“முருக பக்த அடியார்கள் வீதி ஒழுங்குமுறைகளைக் கவனத்தில் கொண்டு, விபத்துகள் ஏற்படாத வண்ணம் அவதானமாகச் செல்ல வேண்டும் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த யாத்திரையானது மிகப்பொன்னான, பாரம்பரியமிக்க ஒரு வழிபாடாகும். எதிர்காலத்தில் இந்த யாத்திரையைப் ‘புனித யாத்திரை’யாக அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு எமது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று குறிப்பிட்டார்.