டெங்கு ஒழிப்பு : மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய பரிசோதனை

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதை முன்னிட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இணைந்து மட்டக்களப்பு நகரில் பாரிய டெங்கு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஈ. உதயகுமார் தலைமையில் இன்று டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாமாங்கம், புதூர், கல்லடி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த விசேட டெங்குப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, டெங்கு முட்டைகள் (குடம்பிகள்) காணப்பட்ட 40 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.