வி.ரி.சகாதேவராஜா)
தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியின் ஏற்பாட்டில் 2023,2024,2025 ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் பதக்கம் அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
” இளைய மனங்களை ஊக்கப்படுத்தி ஔிமயமான நாளை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இவ் விழா, தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் என்.ஜனன் தலைமையில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியால ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.
தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மாணவர்களில் தரம் 05 புமைப்பரிசில் 2023,2024,2025 ஆண்டுகளில் சித்தியடைந்த 100 மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைபரிசில் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


