ஆடி அமாவாசை தினத்தினை விடுமுறையாக்க இந்துமத பீடம் பிரதமரிடம் கோரிக்கை

இந்துக்கள் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கும் நாளான ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை நாளாக்க வேண்டும் சர்வதேச இந்துமத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆடி அமாவாசை விரத நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 12ம் திகதி வரவுள்ள நிலையில் இந்த தினத்தை விடுமுறையாக்க வேண்டும் என சர்வதேச இந்துமத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

ஆடி மாதம் அமாவாசையில் முன்னோர்களின் தர்ப்பனங்கள் இந்து மக்களால் புனிதமாக கொண்டாடபடுகின்றது. இப்புனிதமான ஆடி அமாவாசை விரத நாளில் முன்னோர்களின் குடும்பத்தினர் விரதம் இருந்து நீர் நிலைகளின் ஓரம் தர்ப்பணம் செய்து தான தர்மங்கள் செய்து சிவ வழிபாடு செய்யும் மிகவும் புண்ணியமான நாளாகும்.

இந்த ஆடி அமாவாசை விரத அனுஷ்டானம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பக்திபூர்வமாக முன்னோர்களை நினைத்து அவர்களின் தலைமுறையினர் எள்ளு தர்ப்பணம் கொடுத்தல் முக்கிய நிகழ்வாகும். எனவே அன்றைய தினம் ஆடி அமாவாசை விரத நாள் அன்று இந்து அரச ஊழியர்களுக்கும் தனியார் துறையினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை நாளாக அறிவித்தால் இந்து மக்களுக்கு மிகவும் பெருமையான விடையம் ஆகும்.

மேலும் இதன் பிரதிகளை புத்தசாசன அமைச்சர் மத கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர் ஹமகெதர திசாநாயக்க அமைச்சர் ராமலிங்கம் சந்திர சேகரன் ,வட மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் ,ரஜீவன் பா.உ ,வைத்தியர் பவானந்தமூர்த்தி பா.உ ,இளங்குமரன் பா. உ ஆகியோரிடமும் இதன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

Kajaana chandrabose
journalist (Dip.journalism )
+947 28719255