மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (23) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தை நிலவரப்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.74 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.64 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதனுடன், இயற்கை எரிவாயு சந்தையிலும் விலைச் சரிவு காணப்பட்டுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.236 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகள், உலகளாவிய தேவை மற்றும் வழங்கல் மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகள் எரிசக்தி சந்தை விலைகளில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.