கம்பஹாவில் நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் 19 மணிநேரம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அத்தனகல்லாவில் உள்ள கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் அவரசப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று (16) காலை 8:00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3:00 மணி வரை 19 மணி நேரத்திற்கு தண்ணீர் வெட்டு அமுலில் இருக்கும்.

இந்த நீர்வெட்டு கம்பஹா மாநகர சபை, கம்பஹா பிரதேச சபை, மற்றும் மஹர பிரதேச சபை ஆகியவற்றின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளையும், அத்துடன் வெலிவெரியா, பெலும்மஹர, ரத்துபஸ்வல, மினுவாங்கொட, அஸ்கிரியா, உடுகம்போல, ஓபத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாதிக்கும்.

மேலும், ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வட்டுபிட்டிவல, நிட்டம்புவ, வெயங்கொட, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.