சங்கீதனை முடக்குவதன் மூலம் தமிழரின் விடுதலைக் குரலையும் ஒடுக்கலாம்

ஒரு சங்கீதனை முடக்குவதன் மூலம் தமிழரின் விடுதலைக் குரலையும் ஒடுக்கலாம் என்று நினைப்பது அறியாமை என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் -சமூக செயற்பாட்டாளருமான ஜெயச்சித்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கலைஞர் சங்கீதனின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அநுர அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.
கலை என்பது தனி நபர் கிடையாது.
அது மக்கள் கூட்டம் தமக்குள்ளே கடத்திக் கொள்ளும் நெருப்பு.
இவ்வாறான அடக்குமுறைகள் பாடல்களை ஒருபோதும் நிறுத்தாது. மாறாக மேலும் புதிய குரல்களை உருவாக்கும்.

வலிகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை எதிர்கொள்ளத் துணிவில்லாத கோழைத்தனமே சங்கீதனை சிறை பிடிக்க வைத்துள்ளது.
இந்த அரசு தொடர்ச்சியாக இளைஞர்களை குறிவைத்து வருகிறது.
சிங்கள பேரினவாத அரசின் உச்ச கட்ட பயம் இவ்வாறான கைதுகள் ஊடாக வெளிப்படையாக தெரிகின்றது.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.