வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

வெசாக் தினத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தை முன்னிட்டு சித்திரை புத்தாண்டு கால நேர அட்டவணைக்கு அமைவாகவே பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பேருந்து சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் வலயங்களை மையப்படுத்தியும் இந்த விசேட சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச தலைவர் சஜீவ கனகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயணிகளின் நலன் கருதி பல விசேட தொடருந்து சேவைகளும் தற்பொழுது செயற்பாட்டில் உள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.