நயினாதீவு கடலில் இன்று (28/05) மாலை கடலில் தவறிவீழ்ந்து மரணம் அடைந்த நடராசா மயூரனின்
சடலம் மீட்கப்பட்டு நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டு , சற்றுமுன் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்நகர் செல்வதற்காக நண்பர்களுடன் நயினாதீவில் இருந்து வெளியிணைப்பு இயந்திரப் படகு மூலம் குறிகடடுவான் நோக்கி சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
நயினதீவு 06 வட்டாரத்தை சேர்ந்தவரும் நயினாதீவு சிறிகணேசா கனிஷ்ட மகா வித்தியால அதிபருமாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான நடராசா மயூரன் (வயது 48 ) என்பவர் நீரில் மூழ்கி இன்று (28) மாலை மரணம் அடைந்துள்ளார்.
நயினாதீவைச் சேர்ந்த இவர் 01.01.2026 நயினாதீவு ஸ்ரீ கணேசா கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை குறபபிடத்தக்கது


