11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்க‍வைிடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த எச்சரிக்கை நாளை (14) காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும்.

இதன்படி, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதியில் உள்ள மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் சரிந்து விழுதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.